• Jul 25 2025

ரஜினி படத்தால் கார்த்திக்கு அடித்த ஜாக்பாட்..! இத எதிர்பார்க்கலயே..! வெளியான செம அப்டேட்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் கார்த்திக். அதாவது அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்த வைத்த கார்த்திக்குக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. 

ஆனால் அவருடைய கஷ்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும் சரியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்க முடியாமல் முடியாமல் போனார். அவர் நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது. 

அப்போதுதான் கார்த்திக்கை ஏவிஎம் நிறுவனம் தொடர்பு கொண்டது.அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடிக்குமாறு கார்த்திகை கேட்டுள்ளனர். ஆனால் இதுவரை ஹீரோவாக நடித்துவிட்டு இப்போது போய் வில்லனாக நடிப்பதா என கார்த்திக் அதை மறுத்து விட்டார். ஆனால் அந்தச் சமயத்தில் கார்த்திக்குக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை என்பது தான் உண்மை.

இதனால் ஏவிஎம் நிறுவனம் கார்த்திக்கு ஒரு ஆஃபர் கொடுத்திருந்தது. அதாவது இந்த படத்தில் நடித்தால் உங்களது கேரியர் பழையபடி மாறிவிடும் என்ற வாக்குறுதி கொடுத்ததுடன், நீங்கள் ஹீரோவாக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணலாம் என்றும் கூறியுள்ளனர். அதன் பிறகு ரஜினிக்கு வில்லனாக நடிக்க கார்த்திக் சம்மதித்தார்.

அந்த படம் தான் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளியான நல்லவனுக்கு நல்லவன் படம். ரஜினி, ராதிகா மற்றும் பல பிரபலங்கள் நடித்த இந்த படத்தில் கார்த்திக் வினோத் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். ஏவிஎம் சொன்னதுபடியே இந்த படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக்கின் சினிமா வாழ்க்கை தொடர ஆரம்பித்தது.



Advertisement

Advertisement