• Jul 26 2025

பிரபுதேவா போல ஆடி கல்லா கட்டிய கதிரவன்..புலம்பித் தள்ளிய மைனா- 58ம் நாளில் நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.அந்த வகையில் 58ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அதன்படி இந்த வாரம் போட்டியாளர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களாக மாறி நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சியின் மூலம் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் இருந்து பணம் வசூலிக்க வேண்டும். எனவே இந்த டாஸ்க் தான் இன்று முழுவதும் நடந்து கொண்டிருந்தது.


அதனைத் தொடர்ந்து கிச்சனில் பாத்திரம் எதுவும் கழுவாமல் அப்படியே இருந்ததால் வீட்டின் தலைவரான மணிகண்டன் ஏகேவிடம் விசாரிக்கும் போது அவர் ஜனனியை மாட்டி விடுகின்றார். பின்னர் அவ்விடத்திற்கு வந்த ஜனனி ஏடிகேவை மாட்டி விட சிறிய பேச்சுவார்த்தை அதில் நடக்கின்றது.

தொடர்ந்து டாஸ்க் நடந்தது. அதில் முதலாவதாக வடிவேலு வேஷம் போட்டிருக்கும் மைனா நந்தினி முதலில் வந்து ஆடினார்.ஆனால் அவருடைய நடனம் பெரிதாக யாரையும் கவராததால் குறைவான பணத்தையே பெற்றுக் கொண்டார். இதனால் புலம்பிக் கொண்டிருந்தார்.


தொடர்ந்து அசீம் சிவாஜி கணேசன் போல நிகழ்ச்சி செய்தார். அதே போல ஜனனி மாரி பட சாய் பல்லவி கெட்டப் போட்டிருந்ததோடு ரௌடி பேபி பாட்டுக்கு நடனம் ஆடினார். தொடர்ந்து சில நிகழை்ச்சிகள் போனாலும் கதிரவன் மைக்கல் ஜாக்சன் வேடம் போட்டு மங்கை நிலாவின் தங்கை என்ற பாடலுக்கு சூபபராக நடனம் ஆடி 9ஆயிரம் ரூபா வரை சம்பாதித்தார்.

இதன் பின்னர் தனலக்ஷ்மி வடிவேலுவின் நேசமணி கெட்டப்பை போட்டு நிகழ்ச்சி செய்தார்.இவருடன் மணிகண்டனும் சேர்ந்து அடுத்ததாக நிகழ்ச்சி செய்தார். இவ்வாறாக இந்த எப்பிஷோட் முடிவடைந்ததைக் காணலாம்.

Advertisement

Advertisement