• Jul 26 2025

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த தன் ‘லவ்லி’ மகளுடன் ராபர்ட் மாஸ்டர்.. நெகிழ்ச்சி ஃபோட்டோஸ்..!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

பொம்மை டாஸ்க், அரசவை டாஸ்க், அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க், பழங்குடி வெர்சஸ் ஏலியன் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களிடையே நிறைய வலுவான போட்டிகளும் அவ்வபோது சண்டை சச்சரவுகளும்  நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருக்கின்றன.


இது ஒரு புறம் இருக்க குறைந்த வாக்குகளைப் பெறும் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு குயின்சி வெளியேறியிருந்தார்.அவரை வீட்டில் ராபர்ட் மாஸ்டர் தான் மகள் என கூறி வந்தார்.


குயின்சி வெளியேற முதல் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியிருந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் சென்றதும் குயின்சி ராபர்ட் மாஸ்டரை தான் சந்தித்து பேசி இருக்கிறார்.அந்த போட்டோவை ராபர்ட் மாஸ்டரே நெகிழ்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார். "I LOVE MY DAUGHTER" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.






Advertisement

Advertisement