• Jul 25 2025

பார்த்திபன் திருமணத்தை நிறுத்த போய் மயங்கி விழுந்த காவியா- தேவி போட்ட புது பிளான்- தலையில் பலத்த காயத்துடன் வந்த பார்வதி

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்பின் உச்ச கட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 செட் பண்ணிய அடியாட்கள் காவியாவை அடித்து துன்புறுத்த ஜீவாவும் அவரது மாமாவும் வந்து காப்பாற்றுகின்றனர். பின்னர் காவியா அவசர அவசரமாக ஓடிப்போய் பார்த்தி என்று கூப்பிட ரம்யா கழுத்தில் தாலி கட்டப்போன பார்த்தி சந்தோஷத்தில் மேடையில் இருந்து கீழே இறங்கி வர காவியாவும் ஓடி வருகின்றார்.


பின்னர் இருவரும் காதலிக்கும் விடயத்தையும் கூறுகின்றனர். காவியா பார்த்திபன் எழுதி வைத்த புத்தகத்தை காண்பித்து தன்னுடைய காதலை வெளிப்படுத்த பார்த்தி மட்டுமல்லாது ஜீவா அருணாச்சலம் ப்ரியா எலலோரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். இருப்பினும் தேவி ரம்யா கழுத்தில் தாலி கட்டுமாறு வற்புறுத்துகின்றார்.

அதிலும் கல்யாணத்திற்கு வந்த அனைரும் ரம்யா கழுத்தில் பார்த்தி தாலி கட்டியே ஆகனும் என்று கூற ஜீவாவும் ப்ரியாவும் அனைவரையும் சமாளிக்க முற்படும் வேளையில் காவியா மயங்கி விழுந்து விடுகின்றார். பின்னர் அங்கிருந்த அனைவரும் காவியாவையும் பார்த்தியையும் பிரித்து பார்த்தியை மேடைக்கு  இழுத்துச் செல்கின்றனர்.


இந்த நேரத்தில் பார்த்தியின் அம்மா பார்வதி தலையில் பலத்த காயத்துடன் வந்து நிறுத்துங்க என்று கூறுகின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது. இதனால் அடுத்து பெரும்பாலும் பார்வதி வந்து எல்லா உண்மைகளையும் சொல்லி ரம்யா பார்த்தி திருமணத்தை நிறுத்துவார் என்றும் தெரிகிறது.


Advertisement

Advertisement