• Jul 24 2025

உள்ளே நெருப்பு தொடர்ந்து எரியட்டும்- நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் - தாறுமாறான அழகில் ஜொலிக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அவரது திரைப்படங்கள் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. 


சமீபத்தில் சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக வெளிநாடுகளுக்காக சென்று சிகிச்சைப் பெற்றும் வருகின்றார்.முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க நடிகை சமந்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் இவர் இறுதியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி எனனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிடடு வருவார். அந்த வகையில் இவர் தற்பொழுது வெளியிட்டிருக்கும் போட்டோஸ் ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement