• Jul 24 2025

ஊர் சுற்றும் கீர்த்தி பாண்டியன் & பிரகதி.. வகைவகையான உணவுகளுடன் இருவரும் எங்கே தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி பாண்டியன், தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளாவார்.மேலும் இவர் இரண்டு படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

அத்தோடு தும்பா, அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுடன், நடிகை வித்யா பிரதீப், நடிகை அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். அத்தோடு பருத்தி வீரன் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரகுமான் இசை அமைக்கிறார்.

அதேபோல் பாடகி பிரகதி, 2010 இல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜூனியர்களுக்கான பாடகர் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர். அத்தோடு தமிழ் சினிமாவில் சில படங்களில் பிரகதி பாடியுள்ளார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளான கீர்த்தி பாண்டியன் & பிரகதி இருவரும் நண்பர்களாக திகழ்கிறார்கள். அவ்வப்போது போட்டோ ஷூட், திருநெல்வேலி பண்ணையில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் கீர்த்தி பாண்டியன். அதேபோல் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள், குடும்ப நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரகதி.


இவ்வாறுஇருக்கையில் இந்தியாவிற்கு வந்துள்ள பிரகதி, கீர்த்தி பாண்டியனுடன் சேர்ந்து சுற்றுலா சென்று வருகிறார். தற்போது சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்றுள்ள கீர்த்தி & பிரகதி அங்குள்ள தெரு உணவான பிரட் ஆம்லேட், ஜூஸ், பிஸ்கட், டீ, இனிப்பு வகைகள் உண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Advertisement

Advertisement