• Jul 25 2025

"உங்களை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம்"- சிறப்பான வாழ்த்துத் தெரிவித்த நடிகர் சூர்யா

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில்  குடியரசுத் தலைவர் மாளிகையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருதும், 4 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 4 பேருக்கு தியான்சந்த் விருதும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கினார். அப்போது, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து செஸ் வீரர் பிரக்ஞானந்தாவும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனும் நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். 

இந்நிலையில் நடிகர் சூர்யா பிரக்ஞானந்தாவுக்கும் இளவேனில் வாலறிவனுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில், "உங்களை நினைத்து நாங்களும் பெருமைப்படுகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.இவரைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  



Advertisement

Advertisement