• Jul 25 2025

பெற்றோரின் சம்மதத்துடன் நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கப்போகும் கீர்த்தி சுரேஷ்-அதுவும் யாரைத் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்துக்காக தேசிய விருது வென்ற இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 

இவர் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.இதில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி. 


அதேபோல் சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர அவர் நடிப்பில் உருவாகி வரும் ரிவால்டர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய இரு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களாகும்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், தனது பள்ளி காதலனை பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.


இரு தரப்பிலும் உள்ள பெற்றோர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், நடிகை தனது திரைப்பட ஒப்பந்தங்களை முடிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.கீர்த்தியின் காதலருக்கு கேரளாவில் ரிசார்ட்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.







Advertisement

Advertisement