• Jul 25 2025

விபத்துக்குள்ளான விஜய் ஆன்டனியின் தற்போதைய நிலை என்ன?- புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட தகவல்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர், நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைத்தது.

இந்த படத்தை, சொல்லாமலே, பூ, போன்ற தரமான தமிழ் படங்களை இயக்கிய சசி இயக்கி இருந்தார். படம் வெளியாகி 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இப்படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆன்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக ஆர் ஆம்புலன்ஸ் மூலம்  மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.


பின்னர்  சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய் ஆன்டனிக்கு தாடை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்காக சில அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள பட்டதாக கூறப்பட்டது.  மேலும் விஜய் ஆன்டனி குறித்து பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், சில நாட்களுக்கு முன்  பிரபல இயக்குநர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.


அதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே விஜய் ஆண்டனி சென்னைக்கு வந்து விட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும், விரைவில் ரசிகர்களை சந்தித்து பேசுவார் என கூறி இருந்தார். இதை தொடர்ந்து சற்று முன்னர் நடிகர் விஜய் ஆன்டனி தன்னுடைய உடல் நிலை குறித்தும், தற்போது நலமாக இருப்பதாகவும் தம்ஸ் அப் போட்டோவை ஷேர் செய்து, தெரிவித்துள்ளார்.

அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "அன்பு நண்பர்களே, மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின் போது பலத்த விபத்தில் சிக்கி தன்னுடைய தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டேன். பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், எனது உடல் நிலையில் காட்டிய அக்கறைக்கும் நன்றி. என கூறியுள்ளார் . இந்த பதிவு தற்போது வைரலாகி வருவதோடு ரசிகர்கள் விரைவில் அவர் பூரண நலம் பெற தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.



















Advertisement

Advertisement