• Jul 25 2025

குக் வித் கோமாளி பிரபலத்துடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்து வருகின்றார்.


குறிப்பாக 2000களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் 2013 இல் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.


எனினும் தமிழில் இவருக்கான அறிமுகத்தை கொடுத்தது விக்ரம் பிரபு நடிப்பில் உருவான 'இது என்ன மாயம்' என்ற திரைப்படம் தான்.மேலும் சிறந்த கதாப்பாத்திரம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான இவர் சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.


படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமையல் சார்ந்த விளம்பரம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார்.


இந்த விளம்பரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து செஃப் தாமுவும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை செப் தாமு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement