• Jul 24 2025

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய கேஜிஎப் யாஷின் மகன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது


RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.


ஆஸ்கார் விருது விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மார்ச் மாதம் 13 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர்,  நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் கலந்து கொண்டனர்.இதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி & பாடலாசிரியர் சந்திரபோஸ் விருதை பெற்றுக் கொண்டனர்.


இந்நிலையில் நடிகர் யாஷ் மகன் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றன. யாஷ் மகனின் பிறந்தநாள் விழாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement