• Jul 23 2025

முடிவிற்கு வந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சி.. கவலையில் மா.கா.பா, பிரியங்கா ரசிகர்கள்.. மற்றுமோர் சர்ப்பிரைஸ் கொடுக்கப் போகும் விஜய் டிவி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பலரும் விரும்பிப் பார்க்கின்ற சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அதற்கு முக்கிய காரணமே இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள். இவை அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அவ்வாறான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக 'Oo Solriya Oo Oohm Solriya' நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.


இந்நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து இருக்கின்றது. இந்நிலையில் Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சியானது இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. 


மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பதிலாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அந்த வகையில் ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 4 அடுத்த வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகவும், இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்க இருப்பதாக கூறி அதற்கான ப்ரோமோவினையும் வெளியிட்டுள்ளது விஜய் டிவி.


Advertisement

Advertisement