• Jul 26 2025

தமிழில் தியேட்டர் கிடைக்கவில்லை.. தாமரை டிவியில் வெளியான 'கிடுகு' படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மதுரையை சேர்ந்தவரான வீரமுருகன் என்பவரின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம், ‘கிடுகு’. இப்படத்தில் கல்லூரி வினோத், பிர்லா போஸ், கொம்பன் இன்பா, மணிமாறன் என்பவர்களுடன் இணைந்து பலரும் நடித்தும் நடித்துள்ளனர்.


இப்படம் குறித்து வீரமுருகன் தெரிவிக்கையில் "நான், கடவுள் பக்தன். திராவிடத்தால் என்னென்ன பாதிப்புகளைச் சந்தித்தோம் என்பதை இந்தப் படத்தின் மூலமாக சொல்லி இருக்கிறோம். எல்லா கடவுளும் ஒன்றுதான். ஆனால், ஒரு மதத்துக்கு மட்டும் ஏன் அடக்குமுறை என்பதை இந்தப் படத்தின் வாயிலாக நாங்கள் கேட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.


மேலும் "தணிக்கைக் குழு இந்தப் படத்துக்கு 250 கட் கொடுத்திருந்தது. இந்நிலையில் தியேட்டர் கிடைக்காததால், தமிழில் இந்தப் படத்தை நாங்கள் வெளியிடவில்லை." எனினும் கர்நாடகாவில் நேற்று வெளியான இந்தப் படம் தாமரை டிவி யூடியூப்பில் தான் வெளியானதாக வீரமுருகன் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement