• Jul 25 2025

“மனிதம் காத்து மகிழ்வோம்”...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த்திற்கு அவரது ரசிகர்கள் பாராட்டு விழா ஒன்றை நடத்த இருக்கின்றனர்.

இந்த நிலையில் வரும் மார்ச் 26 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமான ஒரு விழாவை நடத்த சோளிங்கர் ரவி திட்டமிட்டு இருக்கிறார்.  அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு பாராட்டு மற்றும் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். இதற்கான அனுமதியை ரஜினிகாந்த்திடம் முறையாக பெற்றுள்ளனர்.

இந்த விழாவிற்காக தமிழகத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். இந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக நலிவடைந்த ரஜினி ரசிகர்களை கண்டறியும்  பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மேலும் இவ்விழாவிற்கு ''மனிதம் காத்து வாழ்வோம் ''என்ற தலைப்பினை சிவகார்த்திகேயன்,கார்த்திக் சுப்புராஜ்,அனிருத்,ராகவா லாரன்ஸ் ஆகிய திரைபிரபலங்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement