• Jul 26 2025

சீரியலில் நடித்ததன் மூலமாக பல கோடி சொத்துக்கு அதிபதியான கிருஷ்ணகுமார்.. வங்கிக் கணக்கு மட்டும் இத்தனையா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று 'தங்கம்'. நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்த சீரியலில் அவரின் கணவர் பாத்திரத்தில் நடித்தவர் தான் கிருஷ்ணா குமார். இவர் சன் டிவியில் பல்வேறு சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் வேறு சில சேனல்களிலும் சீரியல்களில் நடித்து இருக்கிறார். 


அதுமட்டுமல்லாது தமிழில் 'தெய்வ திருமகள், சத்யம், தில்லாலங்கடி, காவலன், பில்லா 2, முகமூடி, மனிதன்' போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் சீரியல்களின் மூலம் பிரதானமாக வருமானம் ஈட்டி வந்த இவர் பாஜகவில் இருக்கிறார். அத்தோடு பாஜக சார்பாக கடந்த சட்டசபை தேர்தலில் திருவானந்தபுரம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையும் தழுவிக் கொண்டார்.


இந்நிலையில் கிருஷ்ணகுமாரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இவருக்கு மனைவி, 4 மகள்கள் என்று பெரிய குடும்பமே உள்ளது. இதில் கிருஷ்ணகுமாருக்கு மட்டும் 2,85,04,246 ரூபாய் சொத்து தனியாக உள்ளது . மேலும் 48,52,760 மதிப்பில் வாகனங்கள் உள்ளன. 

அதேபோல் இவரின் மனைவிக்கு மாத வருமானம் 4,65,250 ஆகும். இவரின் முதல் பெண் குழந்தையான ஆஹானாவிற்கு வருமானம் மாதம் 16,18,205. அதுமட்டுமல்லாது கிருஷ்ணகுமாரிடம் 12 வங்கி கணக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது.


அந்த கணக்குகளில் எல்லாம் சேமிப்பு ரூபாய் 1,28,75,245 உள்ளது. மேலும் ரூபாய் 33,27,000 மதிப்பிலான தங்கம் இவரிடம் உள்ளது. இவரின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூபாய் 2,00,00,000 ஆகும். அத்தோடு இது போக இவரின் மகள்களுக்கு தனி தனியாக நிறைய வங்கி கணக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

அந்தவகையில் கிட்டத்தட்ட 10 வங்கி கணக்குகள் உள்ளன. அதில் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் வரை இவர் சேமித்து வைத்து இருக்கின்றார். இவை அனைத்தும் இவர் சீரியல்கள் மூலம் கிருஷ்ணகுமார் ஈட்டிய வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement