• Jul 26 2025

கணவரை நினைத்து மனம் உருகிய குக்வித்கோமாளி ஸ்ருதிகா.. காரணம் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது தான் குக்வித்கோமாளி.சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பியல்பு.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்காளாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்து கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் விரைவில் ஆரம்பமாக உள்ளது.


அந்த வகையில் 3வது சீசனில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஸ்ருதிகா.இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே  தனது சமையல் மற்றும் துறுதுறுவென செட்டில் வலம் வந்ததன் மூலம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தார். ஒரு குழந்தையை போல, சிரித்த முகத்துடனே வலம் வந்த ஸ்ருதிகா, குக் வித்  கோமாளி நிகழ்ச்சியை சார்ந்த பலரின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார். தொடர்ந்து அவர் டைட்டில் வின்னர் ஆகவும் மாறியதையடுத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக ஸ்ருதிகா இருந்து வருகிறார்.


இந்த நிலையில், தற்போது தனது திருமண நாளை குறிப்பிட்டு கல்யாண ஃபோட்டோவை ஸ்ருதிகா பகிர்ந்துள்ளார். ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்திருந்த போது அவர் ஜாலியாக அங்கே வலம் வந்தது பலரையும் கவர்ந்திருந்தது.இதனிடையே, தற்போது திருமண நாளை முன்னிட்டு, கல்யாணத்தன்று எடுத்த புகைப்படத்தையும் ஸ்ருதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "இத்தனை வருடங்களில் என்னுள் சிறந்ததை மட்டும் வெளிக் கொண்டு வந்தவருக்கு... நான் இருப்பது போலவே என்னை நேசித்து, நான் செய்யும் அனைத்திலும் எனக்கான தன்னம்பிக்கையையும் தருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement