• Jul 25 2025

“காவாலா'' பாடலுக்கு கியூட்டா.. டான்ஸ் ஆடிய ‘இரவின் நிழல்’ நடிகை! வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை செய்து வருகிறது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக தமன்னாவின் கிளாமர் டான்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல் ஆகியவை இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மாஸ் நடிகர்கள் பாடல்கள் வெளியாகும் போது திரையுலக பிரபலங்கள் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வைரல் ஆக்கி வருவார்கள் என்பது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் ’காவாலா’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது ’இரவின் நிழல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை சாய்பிரியா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’காவாலா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு ஒரு சிலர் வாழ்த்து தெரிவித்தாலும் பலர் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக ’லோ பட்ஜெட் தமன்னா’ என்று சாய்பிரியாவை ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.


Advertisement

Advertisement