• Jul 25 2025

நடிகர் சங்கத்திடம் பொருளாதார உதவி கேட்டு கோரிக்கை வைத்த மறைந்த நடிகர் ஹரி வைரவனின் மனைவி

stella / 2 years ago

Advertisement

Listen News!

 இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் ஹரி வைரவன்.இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார்.இவர்களுடன் பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

 இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஹரி வைரவன் இன்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார். மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல்  வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடு, உடைந்த ஓட்டு வீடாக காட்சியளிக்கிறது.

நடிகர் ஹரி வைரவனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு கவிதா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில்  தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. வாழ்வாதார உதவிகளுக்காகவும் குழந்தையின் படிப்புக்காகவும் பொருளாதார ரீதியாக உதவிகளை கேட்டு நடிகர் ஹரி வைரவனின் மனைவி கவிதா நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement