• Jul 24 2025

அஜித்திற்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி- அவரே கூறிய சுவாரஸியமான தகவல்- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இதன் பின்னர் சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன் ஆகிய படங்கள் வெளியானது. நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் DSP திரைப்படம் வெளியாகி உள்ளது.


ஹீரோவாக மட்டுமல்லாது வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.மேலும் இவர் நடித்து வரும்  இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்நிலையில் விஜய்சேதுபதி பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல சம்பவங்களை மனம் திறந்துள்ளார். குறிப்பாக, "நடிகர் அஜித்துடன்  வில்லனாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. முதன்முதலில் நடிகர் அஜித்துடன் தான் வில்லனாக நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு பேச்சுவார்த்தை நிகழாமல் போனதால் நடிகர் அஜித்துடன் வில்லனாக நடிக்க முடியாமல் போய்விட்டது" என விஜய் சேதுபதி கூறியுள்ளார். 

Advertisement

Advertisement