• Jul 25 2025

வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல்- நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

யுத்தம் செய் படத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாரிமுத்து. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

 மேலும் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2, சூர்யாவுடன் கங்குவா உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார்.பெரிய திரையில் இப்படி பல நடிகர்களுடன் நடித்து புகழடைந்திருந்தாலும் அவரை வெகுவாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது சன்டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் தான்.


இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். ஆணாதிக்க சிந்தனையுடனும், எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.

இந்தச் சூழலில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சென்னையில் இருக்கும் சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள்வரை இரங்கல் தெரிவித்துவருகின்றனர்


இந்த நிலையில் தற்பொழுது அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் சென்ராஜன், நடிகர் முனீஸ்காந்த் என பல பிரபலங்கள் நேரடியாகச் சென்று தமது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement