• Jul 24 2025

நடிகர் மாரிமுத்து உயிரிழப்பு... மனமுருகி இரங்கல் தெரிவித்த ராதிகா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படம் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்துவுக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திருப்புமுனையாக அமைந்தது. இதனித் தொடர்ந்து இயக்குநராகவும், குணச்சித்திர நடிகராகவும் திரையுலகில் ஜொலித்து வந்தார் மாரிமுத்து.


படங்களின் மூலமாக மக்களிடம் பரீட்சையமான மாரிமுத்து சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் இவர் இன்றைய தினம் திடீரென உயிரிழந்தமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதனையடுத்து நடிகை ராதிகாவும் அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் "மாரிமுத்து இறந்த செய்தியை கேட்டு ரொம்ப ஷாக்கிங்காக இருந்தது. நேற்று ஜெயிலர் படம் பார்த்து அவர் நடித்திருத்தது குறித்து சந்தோஷமாக இருந்தது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பது நல்ல விடையம். அவர் முன்னர் திரைப்படம் ஒன்றையும்  இயக்கிஉள்ளார். ரொம்பவும் நல்ல மனிதர். இவரின் இறப்பு அவரின் குடும்பத்தாருக்கும், திரையுலகிற்கும் பெரிய இழப்பு. அவரின் ஆன்மா சாத்தியடைய பிராத்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement