• Jul 23 2025

'கண்ணீர் வரும் அளவுக்கு சிரிப்பும் அழுகையும்': …டாடா படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கணேஷ் கே பாபு என்பவர் இயக்கத்தில் கவின்,அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘டாடா’. காதல் மற்றும் தந்தை சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் மழையினை கொட்டி வருகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும் டாடா படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான சூரி, சமீபத்தில் டாடா திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு பேசிய சூரி ” கவின் நடித்துள்ள ‘டாடா’ திரைப்படம், ரொம்ப நிறைவான படமாக உள்ளது.

படத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, செல்ஃபோனை பார்க்காமல் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தை பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பான படம். பல இடங்களில் கண்ணீர் வரும் அளவுக்கு சிரிக்க வைத்தார்கள். இறுதியில் கண்ணீர் வரும் அளவுக்கு அழவைத்தார்கள்” என சூரி டாடா படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.


சூரி பாராட்டி பேசிய வீடியோ ட்வீட்டரில் வைரலாகி வந்த நிலையில், அதனை பார்த்த நடிகர் கவின் நன்றி அண்ணா என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்” மேலும் டாடா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 6 கோடி வசூல் செய்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பது கிடைத்து வருவதல் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement