• Jul 26 2025

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?- அவரே கூறிய சுவாரஸியமான விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக அடம் பிடித்தவர் தான் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் ஆரம்பகாலங்களில் குறும்படங்களையே இயக்கி வந்தார். அதனைத் தொடர்ந்து மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வேற லெவல் வெற்றியும் பெற்றது.தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.இப்படம் வசூலில் அள்ளிக் குவித்தது.


இவற்றை விட இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பாஸ்டர் வெற்றி பெற்றதோடு லோகேஷை பான் இந்திய இயக்குநராக உயர்த்தியுள்ளது.இதனை அடுத்து மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், தளபதி67 பூஜையும் தற்போது நடைபெற்றள்ளது.தற்போது தனது முதல் படத்தின் சம்பளத்தை பற்றி ஓபன் ஆக கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில் மாநகரம் படத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டதாகவும் , டிடிஎஸ் போக ரூ. 4.50 லட்சம் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.தனது விடாமுயற்சியினால் அப்போது லட்சத்தில் ஆரம்பித்து இப்போது கோடியில் சம்பளம் வாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement