• Jul 26 2025

''எனக்கு அந்த மாதிரி மாப்பிளை பாருங்க''...நடிகை மீனா கூறிய சீக்ரெட் தகவல்.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ‘நைனிகா’ என்கிற பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிகை மீனா முக்கியமான படங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நல குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். இதனால் மனமுடைந்து போன நடிகை மீனா எங்கேயும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பிறகு பழையபடி தனது நண்பர்களுடன் வெளியில் செல்வது, குழந்தையுடன் விளையாடுவது என பழைய நிலைமைக்கு வந்துவிட்டார்.

படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இதனையடுத்து , நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை மீனா ” நான் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு எனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது நான் என்னுடைய அம்மாவிடம் எனக்கு ஹ்ரித்திக் ரோஷனை மாதிரி மாப்பிளை பாருங்கள் என்று கூறினேன். ஏனென்றால், எனக்கு சின்ன வயதில் இருந்தே அவரை பிடிக்கும். நான் ஹ்ரித்திக் ரோஷனின் மிக பெரிய ரசிகை. அவரின் நடிப்பு, நடனம் எல்லாமே நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement