• Jul 26 2025

லவ் வந்திருச்சு அதனால தான் கேஃமை ஒழுங்காக விளையாட முடில- கமல்ஹாசனுக்கே உருட்டிய ராபர்ட் மாஸ்டர்-நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, 50 நாட்களைக் கடந்து தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரை 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். மீதம் 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் கடும் போட்டிகளுக்கு நடுவில் விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் வீட்டில் குரூப்பிஷம் இருக்கா என்று கேட்டபோது இல்லை என்று சொல்லி கொஞ்ச பேர் தனியாகப் போய் இருந்தார்கள்.மேலும் குரூப்பிஷம் இருக்கு என்று அசீம் வெளிப்டையாகப் பேசிட்டு இருந்தார்.விக்ரமன் கூட கொஞ்சம் தடுமாறுவார். ஆனால் அசீம் அப்படி இல்லை எல்லாவற்றையும் நேரடியாக கூறினார்.


இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஆடியன்ஸை ஹவுஸ்மேட்ஸிடம் பேச வைக்கின்றார்.அவர்கள் தமக்கு பிடித்தவர்களிடம் கேள்விளைக் கேட்டனர்.அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் ஆடியன்ஸ் கேள்விகளுக்கு பதில் கூறிட்டு இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து மைனா நந்தினியும் மணிகண்டனும் தங்களது பிரண்ஷிப் பற்றி பேசிட்டு இருந்தார்கள்.

இதனால் கடுப்பான கமல்ஹாசன் இது தான் உங்களுக்கான கடைசி சந்தர்ப்பம் யூஸ் பண்ணிக்கோங்க என்று மணி கண்டனுக்கு அட்வைஸ்ட் பண்ணினார்.பின்னர் இதனைத் தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் இந்த வீட்டை விட்டு வெளியேறினார். வெளியேறும் போது எல்லோருக்கும் பாஃய் சொன்னார். ஆனால் ரச்சிதாவை கண்டு கொள்ளாதது போல சென்றுவிட்டார்.


இருப்பினும் ரச்சிதா இதனைப் பற்றி கவலைப்படாமல் இருந்தார். பின்னர் கமல்ஹாசனிடம் பேசும் போதும் வீட்டுக்குள்ள போகும் போது நல்லாத் தான் போனேன். ஆனால்  லவ் வந்ததால் தான் இப்படி மாறிட்டேன். அதாவது குயின்சியை என்னோட பொண்ணு மாதிரி பார்க்க ஆரம்பிச்சதால் தான் என்னால கேஃமை ஒழுங்கா விளையாட முடில என்றும் பேசினார். பின்னர் கமல்ஹாசனும் நன்றி தெரிவித்து அனுப்பிவைத்தார். இவ்வாறாக இந்த எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement