• Jul 25 2025

கணவருக்கு அந்த விசயத்தில் குறை வைக்காத மகாலட்சுமி-ரொமாண்டிக் புகைப்படத்துடன் ரவீந்தர் சொன்ன விசயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா என்னும் சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை மகாலட்சுமி.இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்தார்.இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகும் நிலையில் இருவரும் அவரவர் வேலையில் கவனம் செலுத்து வருகின்னர்.

அவ்வப்போது அவுட்டிங் செல்லும் போட்டோக்களை ஷேர் செய்து வரும் மகாலட்சுமியும் ரவீந்தரும் தங்களின் காதலை மாறி மாறி பொழிந்து வருகின்றனர். இதற்கிடையில் மனைவியுடன் அவுட்டிங், டின்னர் என்று நாட்களை கழித்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


தற்போது ஞாயிற்று கிழமையில் மனைவியின் பாசத்தோடு அணைத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரவீந்தர்.

ரொமான்ஸ்-ல் கணவருக்கு குறை வைக்காத மனைவி என்று மகாலட்சுமியை பாராட்டியும் வாழ்த்து கூறி கருத்துக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.




Advertisement

Advertisement