• Jul 25 2025

லவ்டுடே கதாநாயகன் பிரதீப் மற்றும் கதாநாயகி இவானாவுக்கு இடையில் காதலா?- ஓ இப்படி ஒரு ஃபீலிங்கா

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளிவந்து எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் லவ் டுடே.இப்படத்தினை இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார்.

மேலும் குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலில் அள்ளிக் குவித்ததோடு தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் முக்கியமாகும். இப்படத்தில் இளம் நடிகை இவானா கதாநாயகியாக நடித்திருந்தார்.


மேலும் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு என பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். நடிகை இவானா சில வாரங்களுக்கு முன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த பேட்டியில் தொகுப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்த இவானா, ' எனக்கு ஹீரோ பிரதீப்புக்கும் இடையே ஏதாவது ஃபீல் ஆச்சா என்று தானே நினைக்கிறீர்கள்.

அப்படியெல்லாம் எதுவும் எங்களுக்குள் நடக்கவில்லை ' என்று கூறியுள்ளார். இதனை ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement