• Jul 25 2025

நயன்தாராவும் இல்லை த்ரிஷாவும் இல்லை- ஏகே 62 திரைப்படத்தில் கதாநாயகியாகும் திருமணம் முடித்த நடிகை- விக்னேஷ் போட்ட புதிய பிளான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தா பாணியில் நெகடிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்பது அண்மையில் வெளியாகிய ட்ரெய்லர் மூலம் தெரிய வந்தது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.


 துணிவு படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதாம். மேலும் இது 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. லும் துணிவைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தை இயக்க இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ஓகே சொல்லியுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது.


அனிரூத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 17 அல்லது 18ம் தேதியில்  ஆரம்பமாகும் என தெரியவந்துள்ளது.ஆனால், இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போவது யார் என்று உறுதிசெய்யப்படவில்லை. த்ரிஷா தான் கதாநாயகி என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், அந்த செய்திகள் யாவும் நம்பிக்கையாக கூறப்படவில்லை.


இந்நிலையில், ஏகே 62 திரைப்படம் அஜித்துக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறதாம்.அப்படி காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்றால், த்ரிஷா அல்லது நயன்தாரா இருவரில் ஒருவர் தான் ஏகே 62வின் கதாநாயகியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement