• Jul 24 2025

மேடம்..இது வேற லெவெலா இருக்கே..! தலைகீழா மாடிப்படியிலிருந்து இறங்கி வந்த நடிகை ஜோதிகா..! ட்ரெண்டிங் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. 2000களில் இருந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவையே தன்னுடைய ராஜ்ஜியத்தில் வைத்திருந்தவர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பன்மொழி திரைப்படங்களிலும் தன் கவனத்தை கொண்டு சென்றார்.

என்ஸ்பிரஸ் குயின் என்றே ஜோதிகாவை சொல்லலாம். இவருடைய ஒவ்வொரு அசையும் ரசிகர்களை ரசிக்கும் படி வைத்தது. கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

பிள்ளைகளின் படிப்பை கருத்தில் கொண்டும் தன் கெரியரை கருத்தில் கொண்டும் சூர்யா ஜோதிகா தம்பதி இப்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. திருமணத்திற்கு பிறகு சிலகாலம் ஜோதிகா நடிக்காமல் இருந்தார்.

அதன் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கம் கதாபாத்திரங்களில் நடித்து அதாவது 36 வயதினிலே என்ற படத்தில் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார்.அதன் மூலமும் நல்ல வரவேற்பை பெற்றார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் ஜோதிகா இன்னும் அதே அழகுடனும் பூரிப்புடனும் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரின் தீவிர உடற்பயிற்சிதான்.

சமீபத்தில் கூட அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் முழுக்க முழுக்க ஜோதிகா தலைகீழாக நின்றே உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் வாவ் கமெண்ட்களை அள்ளி விட்டு வருகின்றனர். கூடவே ஜோதிகா ஒரு கேப்டசனையும் சேர்த்து பதிவிட்டிருக்கிறார். அதுதான் இப்போது மிகவும் டிரெண்டாகி வருகிறது.



Advertisement

Advertisement