• Jul 25 2025

முதன்முறையாக சூப்பர் சிங்கர் மேடையில் பாடலுக்கு இசையமைத்த வித்யாசாகர்- ரசிகர்களை குஷிப்படுத்தும் ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் விஜே பிரியங்கா. அந்த வகையில் ப்ரியங்காவுடன் மாகாபா ஆனந்தும் இணைந்து தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர் 9 . இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் கலந்து கொண்டுள்ளார்.

இவரது இசைப் பயணத்தில் முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டுள்ளார்.இவரைக் குஷிப்படுத்தும் விதமாக இவர் இசையமைத்த பாடல்களையே போட்டியாளர்களும் பாடியுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் போட்டியாளர் ஒருவர் பாடல் வரி எழுத அதற்கு இசையமைத்து நடுவர்களை பாடச் செய்துள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.எனவே இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது வேற லெவலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement