• Jul 23 2025

ஷங்கர் மனைவியை அசிங்கப்படுத்திய மாவீரன் படக்குழு... சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் மலேசியாவிற்கு பட புரமோஷனுக்காக வந்தவருக்கு பிக்கப் பண்றது கூட யாரும் வரல. கார் டாக்ஸியை பிடித்து ஹோட்டலுக்கு சென்றார். தங்குவதற்காக சாதாரண ஹோட்டலில் ரூம்மை புக் செய்து  அவரை டூரிஸ்ட் விசாவில் அழைத்து வந்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் காலிங் விசாவில் தான் சென்று இருக்க வேண்டும், ஆனால் டூரிஸ்ட் விசாவில் சென்றதால் பொது மேடையில் மைக் பிடித்து பேசக்கூடாது என போலீஸ் அவரை கைது செய்யும் ரேன்ஜ்க்கு சென்றுவிட்டனர்.

கடைசியில் மாவீரன் படத்தை மலேசியாவில் டிஸ்ட்ரிபியூஷன் செய்யும் நிறுவனத்திடம் பேசி, அந்த பிரமோஷன் நிகழ்ச்சியை நிறுத்த வைத்து பிரஷ்மீட் மட்டுமே கொடுத்துவிட்டு சிவகார்த்திகேயன் வந்துவிட்டார். அதே மலேசியாவில் ஷங்கரின் மனைவியும் அசிங்கப்பட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயனைப் போல் அந்த படத்தின் நாயகி ஷங்கரின் மகள் அதிதி அவரும் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார், அவருடன் ஷங்கர் மனைவியும் கலந்து கொண்டார். போகும்போது விஐபிகளுக்கு என்று ஃபிளைட்டில் டிக்கெட் போடாமல் சாதாரண நபர் போகும் டிக்கெட்டை போட்டு அவரை வருத்தப்படுத்தியுள்ளனர்.

இதைப்பற்றி புலம்பி கொண்டே இருந்த ஷங்கரின் மனைவி சரி மலேசியாவில் ப்ரோமோஷன் முடித்து கிளம்பும்போதாவது பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் போடுவார்கள் என நினைத்தார். ஆனால் எதில் நீங்கள் வந்தீர்களோ அதே மாதிரி சென்று விடுங்கள் என்று மீண்டும் எகனாமிக்கல் கிளாஸ் டிக்கெட்டை போட்டு மறுபடியும் அசிங்கப்படுத்தி உள்ளனர்.

ஷங்கரின் மனைவி, கதாநாயகியின் அம்மா என தெரிந்தும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்தியது ஷங்கருக்கும் அதிக கோபம் வந்துவிட்டது. ஆனால் இதைப் பற்றி படக்குழு சுத்தமாகவே காட்டிக் கொள்ளவில்லை.


Advertisement

Advertisement