• Jul 25 2025

53வயதில் அடியெடுத்து வைத்த மாதவன்... இவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் மாதவன். அந்தவகையில் 'அலைபாயுதே' என்ற படத்தில் தொடங்கிய மாதவனின் திரைப் பயணம் அவரை வெற்றி நாயகனாக உச்சத்தில் வைத்தது. 


ரசிகர்களின் மனதில் காதல் நாயகனாக குடி கொண்ட மாதவன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் ஆக்ஷன் ஜானரிலும் கலக்கினார். மேலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக நேர்த்தியாக பொருந்தி நடிக்க முடியும் பல படங்களின் வாயிலாக இவர் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்.

அத்தோடு தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் கால்பதித்த மாதவனுக்கு அங்கும் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து. அத்தோடு 'ராக்கெட்' படத்தின் மூலம் சிறந்த இயக்குநருக்கான விருதினையும் வென்று இருக்கின்றார்.


இவ்வாறாக பன்முகத் திறமை கொண்ட மாதவன் இன்றைய தினம் 2தனது53 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதனையடுத்து இவரின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் மாதவனின் சொத்து மதிப்பு ரூ.105 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 


அத்தோடு இவருக்கு மும்பையில் ஆடம்பரமான பங்களா உள்ளது. அதுமட்டுமல்லாது சென்னையில் ரூ.18 கோடி மதிப்பில் மாதவனுக்கு மற்றுமோர் வீடு உள்ளது. மேலும் இவர் ரேஞ்ச் ரோவர், ஆடி மற்றும் BMW உள்ளிட்ட கார்களை பயன்டுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement