• Jul 24 2025

பெரிய முட்டாள் தனம்... யாரையும் நம்மளால மாத்த முடியாது... அதிரடிக் கருத்தை வெளியிட்ட 'பாக்கியலட்சுமி' கோபி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக அதாவது பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.

இருப்பினும் இந்த சீரியலினுடைய மிகப்பெரிய திருப்பு முனையாக இருப்பவர் கோபி தான். இந்த சீரியலின் வாயிலாக சதீஷ் கோடிக்கணக்கான ரசிகர்களை தனக்கென்று சேர்த்துள்ளார்.


சீரியல் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் எதையாவது தகவல்களை சொல்லி வீடியோவாக வெளியிட்டு வருவார். இந்நிலையில் இன்றைய வீடியோவில் தத்துவக் கருத்து ஒன்றினைக் கூறியுள்ளார். அதாவது "கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு, சமூக வலைத்தளங்கள் மற்றும் புத்தகங்கள் என்பவற்றின் மூலம் நாம் கொஞ்ச அறிவை வளர்த்து விட்டு நாம ஏதோ பெரிய மேதை என்று நினைக்கின்றோம், இது பெரிய தப்பு, முட்டாள் தனம்.


நம்மள நாம மாத்திக்கணும், மற்றவங்கள நாம மாத்த முடியாது, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நம்மை நாம் மாத்திக்கணும்" என அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement