• Jul 24 2025

பிக்பாஸிற்குச் செல்லும் மாகாபா ஆனந்த் மற்றும் நடிகர் சரத்- ப்ரியங்கா வெளியிட்ட வீடியோ- குழப்பிறாங்களேப்பா??

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7ம் சீசன் தொடக்க விழா நாளை, அக்டோபர் 1ம் தேதி, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஷோ மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.போட்டியாளராக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் பப்லு, கூல் சுரேஷ்,  விசித்ரா, வினுஷா தேவி,  தர்ஷா குப்தா, மாடல் நடிகை அனன்யா ராவ், பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, ரவீனா தாஹா, விஜே பார்வதி, நடனக் கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப்சீரிஸ் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன், சரவண விக்ரம், விஷ்ணு உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிக்கடி கசிந்து கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில் விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்கா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மாகாபா ஆனந்த் மற்றும் நடிகர் சரத் இருக்கின்றனர். இப்போது ப்ரியங்கா பிக்பாஸிற்கு மாகாபா ஆனந்த் போகின்றார் என்பது போல பேசிக் கொண்டிருக்கின்றார்.ஆனால் அவர் தான் பாரினுக்கு போகின்றேன் என்று சொல்லி விடுகின்றார்.

இதனால் மாகாபா ஆனந்த்த உண்மையாகவே பிக்பாஸிற்குப் போகின்றாரா அல்லது வெளிநாட்டுக்குத் தான் போகின்றார்களா என்ற எதிர்ப்பார்ப்பானது அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement