• Jul 23 2025

உங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கிச் செல்லும் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்- பிரபல இயக்குநருடன் சிவகார்த்திகேயன் வெளியிட்ட போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது."டான்" படத்துக்கு பின்,  இயக்குநர் ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த ப்ரின்ஸ் படம்   தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளியானது .

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் .


இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.மேலும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், தனது டுவிட்டர் பக்கத்தில் தான் அடுத்ததாக நடிக்க உள்ள SK21 படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்லும் நண்பர்களை உருவாக்கி கொள்ளுங்கள்" என தலைப்பிட்டு உள்ளார். இந்த புதிய படத்தனை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement