• Jul 25 2025

"நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு தெரியும்..."முக்கிய பிரபலத்தை கடுமையாக விமர்சித்த அபிராமி...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். மேலும்  இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் 3, பிக்பாஸ் அல்டிமேட் உள்ளிட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அபிராமி. எனினும் சமீபத்தில் காலசேத்ரா கலாச்சார கல்லூரியில் ஆசிரியரால் பாலியல் தொல்லை கொடுப்பதாக படிக்கும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரியளவில் வெடித்தது.

இதுபற்றி நடிகை அபிராமி, காலசேத்ராவில் நானும் படித்துள்ளேன். நான் படிக்கும் போது எனக்கு அப்படிபட்ட சம்பவம் நடக்கவில்லை என்று ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் அபிராமி பலரின் கண்டத்திற்கு ஆளாகி வந்துள்ளார்.

இதுகுறித்து நடிகை குட்டி பத்மினி பேட்டியொன்றில், நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது சாதாரணமாக இருக்கலாம். பல டேக்குகள் வாங்கும் உங்களுக்கு அது பெரிய உணர்வாக இருக்காது. ஆனால் மற்ற பெண்கள் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல ஆசிரியராக வெளியே போகப்போகிறார்கள். அப்படியிருக்கும் அவங்களின் மனவேதனையை எப்படி நீங்கள் சாதாரணமா சொல்லிட்டீங்க என்று கூறியிருந்தார்.


அத்தோடு இந்த வீடியோவை பார்த்த அபிராமி, ஒன் மோர் விசயம், உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்கறோ அண்ட்டி, இந்த வயசுல உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை அபிராமி.





Advertisement

Advertisement