• Jul 25 2025

மம்முட்டியின் படத்திலா இப்படி.. திருட்டுப் புகார் அளித்த பெண் இயக்குநர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மம்முட்டி. மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓ.டி.டி. தளத்திலும் சமீபத்தில் வெளியாகி உள்ளது. 


இந்த படத்துக்கு சமுத்திரக்கனி நடிப்பில் உருவான தனது 'ஏலே' பட காட்சிகளை திருடி இருப்பதாக பெண் டைரக்டர் ஆன ஹலிதா ஷமீம் பலவாறு குற்றம் சாட்டி உள்ளார்.  மேலும் இவர் தமிழில் சில்லுக்கருப்பட்டி, பூவரசம் பீப்பி ஆகிய படங்களையும் டைரக்டு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து ஹலிதா ஷமீம் வெளியிட்டுள்ள பதிவில், "ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அதில் அவர்களையும் நடிக்க வைத்தோம். நாங்கள் படமாக்கிய அதே கிராமத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும் நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இப்படம் முழுக்க களவாடப்பட்டு உள்ளது" எனக் கூறியுள்ளார்.


மேலும் "ஐஸ்காரர் என்றால் இங்கே பால்காரர். செம்புலி இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது"போன்ற பல ஒற்றுமைகள் உண்டு. அதுமட்டுமல்லாது ஏலே படத்தில் நடித்த கலைக்குழு பாடகர் பாத்திரம் போலவே, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்முட்டியுடன் பாடிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் இன்னும் நிறைய உள்ளன" எனக் கூறி இப்படத்தின் மீது திருட்டுப் புகார் அளித்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

Advertisement

Advertisement