• Jul 25 2025

திடீரென மதம் மாறிய மணிமேகலையின் கணவர்..? அவதூறு வார்த்தைகளால் திட்டும் நெட்டிசன்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே மணிமேகலை. இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்த உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு மதம் என்பதனால் குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார் மணிமேகலை.


இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்சிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் அவரது கணவர் உசைனுடன் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வந்தார். இதனையடுத்து பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைத்து ரசிகர்களை பலரையும் தனது நகைச்சுவை கலந்த பேச்சினால் கவர்ந்து வந்தார்.


இருப்பினும் எதிர்பாராத விதமாக சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறி வந்த நிலையில் மணிமேகலை தன் சொந்த ஊரில் HM Farm House செய்ய ஆரம்பித்து அதற்கான பூஜையை செய்திருக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சிலர் "இந்து மதத்திற்கு மாறிவிட்டாரா உசைன்" என்று கூறி அவரை விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது மணிமேகலை மற்றும் உசைன் பற்றி அவதூறான வார்த்தைகளால் திட்டி, கருத்துக்கள் பகிர்ந்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள். இருப்பினும் ஒரு சில நெட்டிசன்கள் மதம் மாறி இருந்தாலும் தப்பு இல்லை எனக் கூறி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.



Advertisement

Advertisement