• Jul 25 2025

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மணிமேலை-அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தனது திறமை மூலம் வளர்ந்து நிற்பவர் தான் மணிமேகலை.இவர்  இயக்குநர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

மேலும் இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பரன மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார்.


குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் 3சீசன்களிலும்தொடர்ந்து பங்கேற்றிய இவர் நான்காவது சீசனிலும் பங்கு பற்றி உள்ளார்.ஆனால் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வலகுவதாக அறிவித்து இருந்தார்.அவர் விலகியதற்கான காரணம் தெரியாததால்  அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் சண்டை என பல வதந்திகள் பரவின.


இவ்வாறுஇருக்கையில், மணிமேகலை தனது சோசியல் மீடியாவில், கணவர் ஹுசைனுடன் நிலத்திற்கு பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்தோடு , அதில், HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால், கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்குகிறோம், கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள் என பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement