• Jul 26 2025

வெளியானது 'போலோ' படத்தின் ட்ரெயிலர்.. அட இதை விட 'கைதி' பரவாய் இல்ல போல இருக்கே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான 'கைதி' படத்தின் உடைய ரீமேக்காக தற்போது ஹிந்தியில் 'போலா' படம் உருவாகி வருகின்றது. கைதி படமானது பலருக்கும் பிடித்துப்போக இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய நடிகர் அஜய் தேவ்கன் முடிவு செய்தார். இதனையடுத்து தமிழில் இப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸுடன் இணைந்து ஹிந்தியில் தயாரிக்கிறது.


இப்படமானது தமிழில் மெகா ஹிட்டான படம் என்பதால் ஹிந்தியில் இதன் மேக்கிங் எவ்வாறு இருக்கும் என்ற ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வகையில்தான் இப்படத்தின் உடைய டீசர் இருந்ததாக பெரும்பாலானோர் தெரிவித்து இருந்தனர்.


இந்நிலையில் போலா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளும், பைக் ஸ்டண்ட்களும் ஓவர் டோஸாக இருப்பது ட்ரெய்லர் மூலம் தெரியவருகிறது. போலா படத்தின் ட்ரெயலரை பார்த்த ரசிகர்கள் டீசருக்கும் ட்ரெய்லருக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. கைதி படம் பார்ப்பதற்கு மிகவும் எதார்த்தமாக இருக்கும். ஆனால் போலா படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே அதில் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்பது தெளிவாகின்றது.


Advertisement

Advertisement