• Jul 24 2025

ரஜினியை அவமானப்படுத்திய மனோரமா ....கூனி குறுக வைத்த சூப்பர் ஸ்டார்..நடந்தது என்ன?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ரஜினி நிஜ வாழ்விலும் ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்பதை பல சமயங்களில் நிரூபித்து இருக்கிறார். அதை திரை பிரபலங்களே புகழ்ந்து கூறியதும் உண்டு. அதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களை நாம் சொல்லலாம். அதில் ஒன்று தான் ஆச்சி மனோரமாவிடம் ரஜினி பெருந்தன்மையாக நடந்து கொண்டது.

அதாவது அவர் தனக்கு சொந்தமான இடத்தை ஒரு பள்ளிக்கு வாடகைக்கு விட்டு வந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த இடத்தை காலி செய்ய சொன்ன மனோரமாவிடம் அந்த பள்ளி நிர்வாகம் முடியாது என்று பிரச்சனை செய்திருக்கிறார்கள். இதனால் வேறு வழி இல்லாத அவர் ஜெயலலிதாவின் பார்வைக்கு இதை கொண்டு சென்றிருக்கிறார்.

அதன் பிறகு இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிந்திருக்கிறது. அதற்கு நன்றி செலுத்தும் விதமாகவும், தன் விசுவாசத்தை காட்டும் விதமாகவும் மனோரமா, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சில மேடைப் பிரச்சாரங்கள் செய்தார். ஏனென்றால் அந்த சமயத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருந்தது. அப்போது எதிர்க்கட்சியை தாக்கும் விதத்தில் சில விஷயங்களை அவர் பேசினார்.

அதில் ஒன்றுதான் ரஜினியை பற்றி அவதூறாக பேசியது. ஏனென்றால் அப்போது அவருடைய அரசியல் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருந்திருக்கிறது. அதனாலேயே அவரை அவமானப்படுத்தும் விதமாக மேடைகளில் மனோரமா பேசியிருக்கிறார். இது கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கி இருக்கிறது.

ஏனென்றால் ரஜினி என்ற மாபெரும் நடிகரை இப்படி அவர் அவமானப்படுத்தியது திரையுலகில் பலருக்கும் பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே மனோரமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரஜினி அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று தன் படத்தில் நடிக்குமாறு கேட்டு இருக்கிறார். இது ஆச்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதாம்.

அது மட்டுமல்லாமல் ஒரு பத்திரிக்கையில் கூட ரஜினி, மனோரமாவை புகழ்ந்து பேசி இருக்கிறார். அதாவது எனக்காக ஆச்சி நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். அதனால் அவர் என்னை ஆயிரம் முறை அடித்தாலும் எனக்கு சந்தோஷம் தான் என்று பெருந்தன்மையாக கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட மனோரமா கூனி குறுகி போய்விட்டாராம். இந்த ஒரு சம்பவமே ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்பதை நிரூபித்து விட்டார்.

Advertisement

Advertisement