• Jul 24 2025

விஜய்க்காக காத்திருக்கும் CM சீட்... ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்... கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் எந்தளவிற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றாரோ அதே அளவிற்கு தனது அரசியல் பயணத்திற்கான அஸ்திவாரத்தினையும் போட்டு வருகின்றார். அந்தவகையில் சமீபகாலமாக அவரின் மக்கள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்பாடுகள் கூடிய விரைவில் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான நடவடிக்கையாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 


அத்தோடு நடிகர் விஜய் தலைமையில் தான் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல சமூக சேவைகளை செய்து வருகின்றார். அதுமட்டுமட்டுமல்லாது சமீபகாலமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இவர் மேற்கொண்டு வருகின்ற சந்திப்புக்களும் அரசியல் குறித்த எண்ணமாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது.


மேலும் விஜய்யின் அரசியல் ஆசையை தீவிரப்படுத்தும் வகையில் ரசிகர்களும் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்தவகையில் தற்போதும் விஜய்யை நாளைய முதல்வராக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து பல போஸ்டர்களை அடித்து வருகின்றனர். 

குறிப்பாக சமீபத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்றில் ஒரு பக்கம் எம்ஜிஆர், ஒரு பக்கம் அண்ணாவை வைத்து அடுத்த சிஎம் நீங்க தான் விஜய் என சொல்வது போல அமைந்துள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்ததும் ப்ளூ சட்டை மாறன் நடிகர் விஜய்யை கழுவி ஊற்றத் தொடங்கி விட்டார்.


அத்தோடு லியோ படத்தில் ஆபாசமான வசனங்கள் உள்ளதாகவும், விஜய் அதெல்லாம் கண்டுக் கொள்ளாமல் காசுக்காக நடித்துள்ளார் எனவும் கூறி பரப்பரப்பைக் கிளப்பி இருக்கின்றார். அத்தோடு லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் போதைப்பொருள் குடோனாக இருப்பதாகவும், இளைஞர்களை அதிகம் கெடுக்கும் விஷயங்களை காட்டி சமுதாயத்தை கெடுத்து வருகின்றனர் எனவும் கூறி ப்ளூ சட்டை மாறன் விளாசித் தள்ளியுள்ளார்.

Advertisement

Advertisement