• Jul 24 2025

மாரிமுத்து என்னிடம் ஒருநாள் சொன்னாரு உச்சத்தில் இருக்கேன் சார், எதிர்நீச்சல் சீரியல் போல ! மனம் திறந்தார் ஆதி குணசேகரனாக களமிறங்கிய வேல ராமமூர்த்தி.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக் காட்சியில் பிரபலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற தொடர் தான் எதிர் நீச்சல் . இத்தொடரில் ஆதிாகுணசேகரனாக நடித்த மாரிமுத்து அண்மையில் காலமானதை தொடர்ந்து இந்த சீரியலும் விழுந்து விட்டது என்றே சொல்லலாம்.


எதிர் நீச்சல் சீரியலில்  மாரிமுத்துவின் மறைவிற்கு பின் அத்தாெடரில் குறித்த ஆதிகுணசேகரன் பாத்திரத்திற்கு  ராமமூர்த்தி நடிக்க களமிறக்கியிருக்காரு , இவர் மாரிமுத்து அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை. ஆனாலும் மாரிமுத்துவின் இடத்தை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றிலே பின்வருமாறு கூறியுள்ளார்.
குணசேகரன் பாத்திரத்தை தூக்கி சாப்பிட வேண்டியது தான்.இது கோடிக்கணக்கான மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் இது சாதாரண விடயம் இல்லை. இயல்பாகவே மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்.இப்போது நான் நல்லபடியாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றேன். மாரிமுத்து என்னிடம் ஒருநாள் சொன்னாரு உச்சத்தில் இருக்கேன் சார், எதிர்நீச்சல் சீரியல் போல என கூறியிருந்தார். உண்மையிலே அவர் உச்சத்தில் தான் இருந்திருக்கின்றார்.என  கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement