• Jul 24 2025

பிரதீப் பற்றி விஷ்ணு கூறிய விஷயம்... விழுந்து விழுந்து சிரிக்கும் கூல் சுரேஷ், மணி... கலகலப்பான Bigg Boss ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் "வெயிட் பார்ட்டி' டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்அப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து வெளியான 2-ஆவது ப்ரோமோவில் பெண்கள் மேக்அப் எல்லாவற்றையும் நீக்குகின்றனர்.


இந்நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் விஷ்ணு, கூல் சுரேஷ், மணி சந்திரா மூவரும் ஒரு இடத்தில அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது விஷ்ணு கூல் சுரேஷிடம் பிரதீப்பை இந்த ஷோவிற்கு கூப்பிட்டது தான் செம இன்ட்ரஸ்ட் ஆக இருக்கின்றது என்கிறார்.


மேலும் "அவங்க பேசினாலும் கொன்னுருவேன் என்கிறார்" எனவும் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் கூல் சுரேஷ், மணி இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். அத்தோடு கூல் சுரேஷ் "எல்லாரும் என்னென்ன மைன்செட்டில் விளையாடுறாங்க என்றே தெரியல" என்கிறார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement