• Jul 25 2025

சின்ன வயசிலேயே திருமணம் ஆகிடுச்சு- உடம்பில 9 இடத்தில் டாட்டூ போட்டிருக்கிறேன்- எதிர்நீச்சல் ஜான்சி ராணி கூறிய ஷாக்கிங் நியூஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் தற்போது  ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம், காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 

ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஜான்சி ராணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துவரும் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் நடிகர் மாரிமுத்து ஆகியோர் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரீல்ஸ் வைரலானது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது  பிரத்யேக பேட்டி அளித்துள்ள நடிகை காயத்ரி நடிகர் மாரிமுத்து குறித்து பேசி உள்ளார். அதன்படி அண்மையில் ட்விட்டரில் வந்த ஒரு புகைப்படத்தின் கீழ் நடிகர் மாரிமுத்து தம்முடைய போன் நம்பரை கொடுத்தது பற்றி நடிகை காயத்ரியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர் "போன் நம்பரை கொடுப்பதும் கொடுக்காததும் அவர் விருப்பம். அவருடைய நோக்கம் என்ன என்று ஜட்ஜ்மெண்ட் பண்ண முடியாது. அது அவருடைய பர்சனல். ஆனால் அதன்பிறகு சூட்டிங் ஸ்பாட்டிலும் சரி, அவர் அது பற்றி விஷயங்களை கண்டு கொள்ளவில்லை. அவர் தன்னியல்பாகவே இருந்தார். எப்போதும் போல ஜாலியாக அனைவரிடமும் பேசி சிரித்து கொண்டிருந்தார். மற்றவர்கள் தான் அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை" என தெரிவித்தார்.


மேலும் தன்னுடைய கெரியரல் இவ்வளது துாரம் வளர்ச்சியடைவதற்கு என்னுடைய கணவர் மற்றும் என்னுடைய மாமனார் மாமியார் தான் சர்ப்போட் பண்ணுறாங்க. எனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆகிடுச்சு. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இது தவிர உடம்பில் 9 இடங்களில் தான் டாட்டூ போட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement