• Jul 24 2025

சமந்தா மயோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக குணமாகி விட்டாரா?- முதன்முறையாக உடல்நிலை பற்றி வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், என அடுத்தடுத்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னர், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். விவாகரத்துப் பெற்று விட்டதால் மீண்டும் நடிப்பல் பிஸியாக இருந்து வருகின்றார்.

இவருக்கு அண்மையில் மயோசிட்டிஸ் என்னும் நோய் எற்பட்டது.இதன் காரணமாக கடந்த ஆண்டு முழுவதுமே இவருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. எழுந்து கூட நடக்க முடியாமல் அவதிப்பட்ட நடிகை சமந்தா, முழுமையாக திரையுலகத்தில் இருந்து சில மாதங்கள் விலகி, முழு ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்றார். 


பல மாதங்கள் இந்த தகவலை வெளியே கசியவிடாமல் இருந்த சமந்தா, யசோதா படத்தின் டப்பிங் பணியின் போது தெரிவித்தார். பின்னர் சமந்தா விரைவில் குணமடைந்து வர பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும், தெய்வத்தின் பிராத்தனையினாலும் தற்போது மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.


 வழக்கம்போல் தன்னுடைய படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருவதோடு, உடற்பயிற்சியிலும் ஆர்வம் காட்டுகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட சிக்ஸ் பேக் புகைப்படம் ரசிகர்கள் அதிகம் கவனம் பெற்ற ஒன்றாக மாறியது.மேலும் தொடர்ந்து பல்வேறு போட்டோ சூட்டுகளை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


 இந்நிலையில் முதல் முறையாக பேட்டி ஒன்றில், சமந்தாவிடம்... தற்போது முழுமையாக மயோசிட்டிஸ் பிரச்சனை இருந்து குணமாகி விட்டீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு,  குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். முன்பை விட தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் இருந்து சமந்தா இன்னும் முழுமையாக குணடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. 


Advertisement

Advertisement