• Jul 26 2025

விஜய் டிவி பாலாவிற்கு ரூ.10 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்...ஏன் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், 'ருத்ரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. 

இதில் 3000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் விஜய் டிவி பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் மேடையில் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கினார். ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement