• Jul 26 2025

கண் கலங்கி அழுத மாஸ்டர்... ரச்சிதா உங்க நிஜ பொண்டாட்டி இல்லை... விளாசும் நெட்டிசன்ஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது என்றுமே இல்லாத அளவிற்கு களை கட்டி வருகின்றது. இதற்கான முக்கிய காரணமே பிக்பாஸ் கொடுக்கின்ற வித்தியாசமான டாஸ்க்குகள் தான்.

அந்தவகையில் இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக அச்சு அசல் மாறி உள்ளது. 


இதில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அரசராக ரொபேர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கண்டமேனிக்கு ரொபேர்ட் மாஸ்டரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.


அதாவது அந்த ப்ரோமோவில், ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் டாஸ்கில் அனைவருக்கும் தெரியாத சில உண்மைகள் என்று பிக்பாஸ் கூறி ஒரு சில விஷயங்களை சொல்ல, கதிரவன் தான் ராஜா என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது. 

இதனைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத ரொபேர்ட் மாஸ்டர் அதிர்ச்சி அடைநது உடனே கண்கலங்கி அழுது விடுகிறார். அதாவது "இத்தனை நாள் நானும், ரச்சித்தாவும் ராஜா,ராணியா இருந்துவிட்டோம். ஆனால், இனிமேல்" என கூறி தேம்பி தேம்பி அழுகிறார். இதனைத் தொடர்ந்து அவரை ஏடிகே சமாதானப்படுத்துகிறார்.

மேலும் இந்தப் ப்ரோமோவில் ரொபேர்ட் மாஸ்டர் கண்கலங்கி பீல் பண்ணியதைப் பார்த்து செம கடுப்பான ஒரு நெட்டிசன்ஸ் "என்னடா இது ...மாஸ்டர் தேவதாஸ் ரேஞ்சுக்கு பீல் பண்ணுராரே" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது இன்னொரு நெட்டிசன்ஸ் "ராஜா-ராணி கேரக்டர்ல இருக்கதுனால நிஜமாவே ராணினு நினைச்சிட்டான் இந்த கிறுக்கன். டாஸ்க்ல அவளுக்கு கொடுத்த வேலை அத பண்ணி ஆகனும். நிஜ வாழ்க்கையில துரோகம் பண்ற மாதிரி பீல் பண்றான். ரச்சிதா இதுக்கு அப்புறமாவது ரொபேர்ட் தெளிவா சொல்லாம விட்டா அவன யூஸ் பண்றானு அர்த்தம்" எனவும் பதிவிட்டுள்ளார்.


அத்தோடு மற்றொரு இணையவாசி "ரொபேர்ட் மாஸ்டர் இது தேவையில்லாத ரியாக்ஷன்ஸ். என்னமோ ராணி உன்னுடைய உண்மையான மனைவி மாதிரி பீல் பண்றீங்க. நீங்க பண்றது எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என்றும், இது ஒரு கேம் ஷோ இந்த கேமில் கவனமாக விளையாடுங்க, அதைவிட்டுவிட்டு சின்னப்பிள்ளை தனமாக நடந்துக்காதீங்க " எனக் கூறி தாறுமாறாக விளாசி இருக்கின்றார்.


Advertisement

Advertisement