• Jul 25 2025

பல வருடக் காதலியைக் கரம்பிடித்த மௌனராகம் சீரியல் நடிகர்- அடடே... இந்த நடிகருக்கு திருமணம் ஆகிடுச்சா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய டாப் சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம்.இந்த சீரியலில் தருண் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் ராகுல் ராமச்சந்திரன்.


கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் மௌன ராகம் என்ற சீரியல் மூலமாக முதன் முதலில் அறிமுகமாகி இருக்கிறார். கதைப்படி இவர் ஹீரோ வருணின் தம்பியாகவும், வில்லி ஸ்ருதியின் கணவராகவும் நடித்திருந்தார்.


குறிப்பாக மலையாள மனோரமா சேனலில் சம்பந்தம் என்னும் சீரியலில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இது மலையாள சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ஒரு தொடராகும்.


இந்த நிலையில் ராகுல் தனது பல வருட காதலியான அஸ்வதியுடன் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தத்தை முடித்திருந்தார். இதனை அடுத்து தற்பொழுது அவருடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இதனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement