• Jul 24 2025

விக்ரம் படம் பார்த்தியா என்று கேட்டாரு?- ஜெயிலர் கதையை லோகேஷிடம் சொன்ன நெல்சன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.எதிர்பார்த்ததை விட ஜெயிலர் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.


 இயக்குநர் நெல்சன் மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கும் இந்த படம் பெரிய கம்பேக் ஆக அமைந்தது.படம் அதிக லாபம் பெற்றதால் படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி ரஜினி, நெல்சன், அனிரூத் ஆகியோருக்கும்  சொகுசு கார்களை பரிசாக கொடுத்திருந்தார்.

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகு அதன் கதை லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் போலவே இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்தனர். அந்த விமர்சனம் பற்றி நெல்சன் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்து இருக்கிறார்.


நான் ஆரம்பத்திலேயே ஜெயிலர் கதையை லோகேஷிடம் கூறினேன்,'நீ விக்ரம் பார்த்தியா.. என அவர் அப்போது கேட்டார்.'ஆரம்பிப்பது ஒரு இடத்தில் இருந்தாலும், இரண்டு கதைகளும் வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றன. கதையை மாற்ற வேண்டும் என எதையாவது செய்து குழப்ப விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement